ADDED : செப் 06, 2011 11:52 PM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் தக்காராக ராமநாதபுரம் குமரன்சேதுபதியை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இவர் ஏற்கனவே இரண்டு முறை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவராக பதவி வகித்துள்ளார். இன்று(செப்.,7) காலை கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் முன்னிலையில் தக்காராக பொறுப்பேற்கிறார்.