/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வீராணம் வெள்ளியங்கால் மதகு சாலை ரூ. 5 லட்சம் செலவில் சீரமைப்புவீராணம் வெள்ளியங்கால் மதகு சாலை ரூ. 5 லட்சம் செலவில் சீரமைப்பு
வீராணம் வெள்ளியங்கால் மதகு சாலை ரூ. 5 லட்சம் செலவில் சீரமைப்பு
வீராணம் வெள்ளியங்கால் மதகு சாலை ரூ. 5 லட்சம் செலவில் சீரமைப்பு
வீராணம் வெள்ளியங்கால் மதகு சாலை ரூ. 5 லட்சம் செலவில் சீரமைப்பு
ADDED : செப் 04, 2011 11:07 PM
காட்டுமன்னார்கோவில் : வீராணம் ஏரி வெள்ளியங்கால் மதகு சாலை 5 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி மூலம் 70 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனத்தை நம்பியுள்ளது. மழைக் காலங்களில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் வீராணம் ஏரியின் மேல்கரை பகுதிகளில் மழை நீர் செங்கால் ஓடை, பாப்பாக்குடி ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு வரும். மேலும் கீழணையில் இருந்து வடவாற்று வழியாக ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து தேக்ககப்படுகிறது.
வெள்ளம் ஏற்படும் சமயத்தில் ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஓடை மற்றும் புதிய வீராணம் மதகு வழியாக கொள்ளிடம், வெள்ளாற்றில் தண்ணீர் திறந்து வெளியேற்றப்படும். ஏரியின் நிலையை லால்பேட்டையில் உள்ள வெள்ளியங்கால் ஓடை கண்காணிப்பது மட்டுமல்லாது தண்ணீர் அளவு இங்கிருந்து எடுக்க முடியும். இதனால் பல லட்சம் செலவு செய்து வெள்ளியங்கால் ஷட்டர் மேல்பகுதியின் ஜீப் டிராக் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளியங்கால் செல்லும் சாலை 5 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.