/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/குருவம்மாபேட்டையில் தயாராகும் காகித கூழ் விநாயகர் சிலைகள்குருவம்மாபேட்டையில் தயாராகும் காகித கூழ் விநாயகர் சிலைகள்
குருவம்மாபேட்டையில் தயாராகும் காகித கூழ் விநாயகர் சிலைகள்
குருவம்மாபேட்டையில் தயாராகும் காகித கூழ் விநாயகர் சிலைகள்
குருவம்மாபேட்டையில் தயாராகும் காகித கூழ் விநாயகர் சிலைகள்
ADDED : ஆக 29, 2011 10:26 PM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே உள்ள குருவம்மா பேட்டை கிராமத்தில் விநாயகர் சிலைகள் உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் வழியில் உள்ள குருவம்மாபேட்டை கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடி விலான விநாயகர் சிலைகள் செய்து வருகின்றனர். இப் பணியில் ஈடுபட்டுள்ள சுப்ரமணி கூறுகையில், விநாயகர் சிலைகள் மூன்று அடி முதல் பத்து அடி வரை உயரத்தில் தயாரித்து மூன்று ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்து வருகிறோம். இவை மைதா மாவு, காகிதம் கலந்த கூழ் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த சிலைகளை தயாரிக்க ஆறு மாதங்களுக்கு முன்பே பணியை துவக்கி விடுகிறோம். இந்த தொழிலை கடந்த பத்து ஆண்டுகளாக செய்து வருகிறோம் என்றார். இதே போல் ஒரு அடி உயரமுள்ள விநாயகர் மண் பொம்மைகளையும் விற்பனை செய்கிறோம். எலி, மான், மயில், மாடு, சிங்கம், அன்னம்போன்ற வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பதை போன்ற சிலைகளும் செய்து தருகி றோம்.