ADDED : ஆக 19, 2011 11:20 PM
தர்மபுரி: தர்மபுரி அருகே கடன் தொல்லையால் மனமுடைந்த, அரசு போக்குவரத்து
கழக பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தர்மபுரி அடுத்த
சோகத்தூர் செயின்மேரிஸ் டவுனை சேர்ந்தவர் பாஸ்கல்அந்தோணிராஜ் (46).
இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். குடும்ப செலவுகளுக்காக பல்வேறு இடங்களில்
கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பித் தர முடியாததால், மனமுடைந்த அவர்,
வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி போலீஸார்
விசாரிக்கின்றனர்.


