/உள்ளூர் செய்திகள்/சேலம்/டவுன்பஞ்., அங்கன்வாடி, பள்ளிகள் பராமரிப்பு ஊராட்சி ஒன்றியம் புறக்கணிப்பதால் சிக்கல்டவுன்பஞ்., அங்கன்வாடி, பள்ளிகள் பராமரிப்பு ஊராட்சி ஒன்றியம் புறக்கணிப்பதால் சிக்கல்
டவுன்பஞ்., அங்கன்வாடி, பள்ளிகள் பராமரிப்பு ஊராட்சி ஒன்றியம் புறக்கணிப்பதால் சிக்கல்
டவுன்பஞ்., அங்கன்வாடி, பள்ளிகள் பராமரிப்பு ஊராட்சி ஒன்றியம் புறக்கணிப்பதால் சிக்கல்
டவுன்பஞ்., அங்கன்வாடி, பள்ளிகள் பராமரிப்பு ஊராட்சி ஒன்றியம் புறக்கணிப்பதால் சிக்கல்
ADDED : ஆக 09, 2011 02:00 AM
மேட்டூர்:டவுன்பஞ்சாயத்தில் இயங்கும் அங்கன்வாடி, சத்துணவு மையம், அரசு
பள்ளிகளை பராமரிக்க நிதி ஒதுக்காமல் ஊராட்சி ஒன்றியமும் புறக்கணிக்கிறது.
அதனால், டவுன்பஞ்.,ல் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பு யார்
என்பதில் குழப்பம் நீடிக்கிறது.சேலம் மாவட்டத்தில், 20 ஊராட்சி
ஒன்றியங்கள் உள்ளது. நங்கவள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில்
நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டபுரம், பி.என்.பட்டி, வீரக்கல்புதூர் என ஐந்து
டவுன் பஞ்., 11 கிராம பஞ்., உள்ளது.இதில், 5 டவுன் பஞ்., உள்பட, 11
பஞ்சாயத்துகளிலும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு
மையங்கள் உள்ளது. ஊராட்சி ஒன்றியத்தில் ஒதுக்கப்படும் நிதி மூலம்
கிராமபஞ்.,ல் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் பராமரிக்கப்படுகிறது,
அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் கட்டப்படுகிறது.
அதுபோல டவுன் பஞ்.,ல் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், அங்கன்வாடி, சத்துணவு
மையங்கள் அனைத்தும் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
ஆனால், டவுன்பஞ்., தனி நிர்வாகமாக செயல்படுவதால், அதன் எல்லைக்குள் உள்ள
பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதன்
பராமரிக்கும் விஷயத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் கண்டு
கொள்வதில்லை.அதனால், பல இடங்களில் டவுன் பஞ்.,ல் உள்ள ஏராளமான ஒன்றிய
பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது.
நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஜீவானந்தம் கூறியதாவது:
டவுன் பஞ்.,ல் உள்ள ஒன்றிய துவக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளிகள் ஊராட்சி
ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், கவுன்சிலர்கள் பஞ்சாயத்துகளில்
இருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். அதனால், கவுன்சிலர்களும் ஒன்றியத்தில்
உள்ள கட்டிடங்களை பராமரிப்பதற்கே முக்கியத்துவம் தருகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய நிதியும் பஞ்சாயத்துகளில் உள்ள பள்ளிகளுக்கு கட்டிடம்
கட்டவும், அங்கன்வாடி மையம் கட்டவுமே ஒதுக்கப்படுகிறது. அதனால்,
டவுன்பஞ்.,ல் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், அங்கன்வாடி, சத்துணவு மையங்கள்
கவலைக்கிடமாக உள்ளது. அவற்றை டவுன்பஞ்., நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்
ஒப்படைத்தால் மட்டுமே சிறப்பாக பராமரிக்க முடியும். இது தொடர்பாக
அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


