/உள்ளூர் செய்திகள்/தேனி/பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கல்பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கல்
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கல்
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கல்
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கல்
ADDED : ஆக 09, 2011 01:25 AM
தேனி : பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வ
குமார் கூறியிருப்பதாவது: செப்டம்பர், அக்டோபரில், நடக்கும் மேல்நிலை தனித்தேர்வர்களுக்கு நேற்று முதல் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலும், பெரியகுளம், உத்தமபாளையம் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட பாடங்களை மீண்டும் எழுதுவதற்கு 'எச்' வகை விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.பத்தாம் வகுப்பு, அதற்கு இணையான படிப்பு முடித்தவர்கள், பிளஸ் 2 நேரடி தேர்வு எழுத எச்.பி., வகை விண்ணப்பங்களை பயன்படுத்தலாம்.
இவர்கள் 2011 செப்டம்பர் முதல் தேதியில், பதினாறரை வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். நேரடி தேர்வுக்கு 5 பிரிவுகளில் பாடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. எல்லா பிரிவுகளிலும் பகுதி 1, பகுதி 2 தேர்வு எழுத வேண்டும்.
'எச்' பிரிவு விண்ணப்பங்களுக்கு 80 ரூபாய், எச்.பி., பிரிவு விண்ணப்பங்களுக்கு 187 ரூபாய் கருவூலச்சீட்டு மூலம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆக., 12க்குள், மண்டல துணை இயக்குனர், 4, ஹக்கீம்அஜ்மல்கான் சாலை, சின்ன சொக்கிகுளம், மதுரை- 2, என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்,என்றார்.


