/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வானூர் ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்புவானூர் ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
வானூர் ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
வானூர் ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
வானூர் ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : ஜூலை 27, 2011 12:07 AM
வானூர் : வானூர் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வானூர் ஒன்றிய குழு கூட்டம் நேற்று மதியம் 3 மணிக்கு சேர்மன் ரங்கநாதன் தலைமையில் நடந்தது.
பி.டி.ஓ.,க்கள் கண்ணன், சம்சுதீன் முன்னிலை வகித்தனர். அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதும், ஒன்றிய பணிகளுக்கான டெண்டரை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் வருகை பதிவேட்டில் கையெழுத்து பதிவு செய்த கவுன்சிலர்கள் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாமல் கூட்டத்திலிருந்து ஒட்டு மொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.