/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பிடாகம் மணல் குவாரியில் லாரிகளின் அணிவகுப்புபிடாகம் மணல் குவாரியில் லாரிகளின் அணிவகுப்பு
பிடாகம் மணல் குவாரியில் லாரிகளின் அணிவகுப்பு
பிடாகம் மணல் குவாரியில் லாரிகளின் அணிவகுப்பு
பிடாகம் மணல் குவாரியில் லாரிகளின் அணிவகுப்பு
விழுப்புரம் : பிடாகம் குவாரியில் உள்ளூர் டிராக்டர்களுக்கு மணல் அள்ள டோக்கன் வழங்காததால் உரிமையாளர்கள் அனைத்து லாரிகளையும் வழிமறித்து நிறுத்தினர்.
பிடாகம் குவாரியில் அருகிலுள்ள அத்தியூர் திருவாதி, குச்சிப்பாளையம், வேலியம் பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த 50 டிராக்டர்கள் மூலம் உள்ளூரைச் சேர்ந்த வர்கள் மணல் அள்ளுகின்றனர். பாஸ் வைத்திருந்தும் கடந்த 21ம் தேதி முதல் இந்த கிராமங்களைச் சேர்ந்த டிராக்டர்களுக்கு மணல் அள்ள டோக்கன் வழங்கவில்லை. அதிகாரிகளிடம் கூறியும் பயனில்லாததால் உள்ளூர் டிராக்டர் உரிமை யாளர்கள் 50 பேர், தொழிலாளர்கள் 40 பேர் உட்பட 90 பேர் நேற்று காலை 10 மணி முதல் பிடாகம் குவாரிக்கு வந்த வெளியூர் லாரிகளை நிறுத்தினர். இதனால் 200க்கும் மேற்பட்ட வெளியூர் லாரிகள் மதியம் வரை மணல் அள்ள முடியாமல் அணி வகுத்தன. தகவலறிந்த பொதுப் பணித் துறை அதிகாரிகள் மதியம் 2 மணிக்கு உள்ளூர் டிராக்டர் உரிமையாளர்களிடம் பேசி, வரும் 25ம் தேதி சுமூக முடிவு எடுப்பதாக கூறினர். இதையடுத்து மதியம் 2.10 மணிக்கு பிறகு வெளியூர் லாரிகளில் மணல் ஏற்றிச் சென்றனர்.