/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கள்ளக்காதலியின் காதலன் கொலை: ஒருவர் கைதுகள்ளக்காதலியின் காதலன் கொலை: ஒருவர் கைது
கள்ளக்காதலியின் காதலன் கொலை: ஒருவர் கைது
கள்ளக்காதலியின் காதலன் கொலை: ஒருவர் கைது
கள்ளக்காதலியின் காதலன் கொலை: ஒருவர் கைது
ADDED : ஜூலை 19, 2011 12:29 AM
மணப்பாறை: மணப்பாறை அருகே கள்ளக்காதலியின் புதிய காதலனை கொலை செய்த கொத்தனாரை போலீஸார் கைது செய்தனர். மதுரை, செல்லூரைச் சேர்ந்தவர் கதிரேசன்(45). கொத்தனாரான இவர் மணப்பாறை அருகேயுள்ள புத்தாநத்தம் கிழக்குத்தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் அப்துல்கனி என்பவரின் வீடு கட்டுமானப்பணியில் கடந்த மூன்று மாதங்களாக அங்கேயே தங்கி வேலைபார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு அப்துல் கனியின் தம்பி அப்துல் பாரி வீட்டின் கட்டுமான பணிகளை பார்வையிடச் சென்றுள்ளார். அப்போது, அங்கு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கதிரேசன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
இச்சம்பவம் குறித்து மணப்பாறை டி.எஸ்.பி., தொல்காப்பியன், இன்ஸ்பெக்டர் அதிவீரராமபாண்டியன் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வந்தனர். போலீஸ் விசாரணையில், கட்டிடத்தில் மற்றொரு கொத்தனராக வேலைபார்த்து வந்த சுரக்காபட்டியைச் சேர்ந்த அழகு(60) என்பவருக்கும், சித்தாளாக வேலைபார்த்து வந்த இடையபட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி சிட்டம்மாள்(40) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், புதிதாக வேலைக்கு வந்த கதிரேசனுக்கும் சிட்டம்மாளுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிட்டம்மாள் அழகுவிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அழகு சனிக்கிழமை (16ம் தேதி) இரவு மது அருந்தி போதையில் தூங்கிக் கொண்டிருந்த கதிரேசனை, கொத்தனார் பயன்படுத்தும் கரண்டியால் கழுத்தில் வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து அழகுவை போலீஸார் கைது செய்தனர்.