/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்
நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்
நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்
நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்
ADDED : ஜூலை 11, 2011 11:11 PM
விருத்தாசலம் : சம்பா பட்டத்தில் நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் சம்பா பட்டத்திற்கு கோ 50 நெல் ரகம் ஏற்றதாகும். 130 - 135 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம் அதிக மகசூல் தர வல்லது. மேலும் மானாவாரி சாகுபடிக்கு அண்ணா 4 என்ற நெல் ரகம் ஏற்றதாகும். இது வறட்சியைத் தாங்கி வளரும்.
இதன் வயது 100 - 105 நாட்கள். களர் உவர் நிலத்திற்கு ஏற்ற திருச்சி 3 என்ற நெல் ரகம் 135 நாட்கள் வயது உடையது. எக்டருக்கு 5,833 கிலோ மகசூல் தர வல்லது. மேற்கண்ட மூன்று நெல் ரகங்களை பயிர் செய்ய விரும்பும் விவசாயிகள் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.