ADDED : ஆக 20, 2011 06:43 PM
கோவை: நூலகர் தினம் மற்றும் சீயாழி ராமாமிர்த அரங்கநாதன் பிறந்தநாள் விழா, கோவை மாவட்ட மைய நூலகத்தில் கொண்டாடப்பட்டது.
இருப்பு சரிபார்ப்பு அலுவலர் கற்பக விநாயகம் வரவேற்றார். கோவை மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) மனோகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் கிருஷ்ணா வாழ்த்துரை வழங்கினார். உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் ஆறுமுகம் சீயாழி ராமாமிர்த அரங்கநாதன் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
உள்ளாட்சி நிதி தணிக்கை உ<தவி இயக்குனர் பாலசுந்தரம், பணி நிறைவு பெற்ற நூலகர்களுக்கு சால்வை அணிவித்து பேசுகையில்,''நூலக வாசர்கள் புத்தகங்களை அதிகம் படித்து உலக அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல்வேறு நூல்களை படிக்கும்போது புதிய தகவல்களை அறிய முடியும். தொடர்ந்து புத்தகங்கள் படிப்பதன் மூலம், தானாக புத்தகம் எழுதும் அளவுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் வரும். தான் கற்ற கல்வியையும், பொது அறிவையும் பிறருக்கு கற்றுத்தர வேண்டும். இதனால் கல்வியறிவு பெருகும்,'' என்றார். மைய நூலக நூலகர் முருகானந்தம் நன்றி கூறினார்.