ADDED : ஆக 03, 2011 10:41 PM
கூடலூர் : கூடலூரில் அரசு கேபிள் 'டிவி' கட்டுப்பாடு அறை அமைக்கவுள்ள 3 இடங்களை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு செய்தார்.
இதில், விநாயகர் கோவில் அருகே நகராட்சி வணிக வளாக கட்டட அறை வசதியாக இருந்ததால், இதனை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. ஆய்வின் போது, கூடலூர் ஆர்.டி.ஓ., தனசேகரன், நகராட்சி செயல் அலுவலர் (பொ) நஞ்சுண்டன், சுகாதார ஆய்வாளர் எடிசன் அற்புதராஜ் உடனிருந்தனர்.