/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மனதை ஒருமுகப்படுத்தினால் லட்சியங்களை அடையலாம்மனதை ஒருமுகப்படுத்தினால் லட்சியங்களை அடையலாம்
மனதை ஒருமுகப்படுத்தினால் லட்சியங்களை அடையலாம்
மனதை ஒருமுகப்படுத்தினால் லட்சியங்களை அடையலாம்
மனதை ஒருமுகப்படுத்தினால் லட்சியங்களை அடையலாம்
ADDED : ஜூலை 25, 2011 01:55 AM
''தியானம் மூலம், மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தினால், அதிக
மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறவும், நடத்தையில் சிறந்து விளங்கவும்,
லட்சியங்களை எளிதில் அடையவும் முடியும்'' என தியான பயிற்சியாளர் சந்தானம்
பேசினார்.சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி
வளாகத்தில், மனதை ஒருமுகப்படுத்தும் தியான வகுப்பு நடந்தது. நிகழ்ச்சியில்,
'குவஸ்டு' தொண்டு நிறுவனத்தின், முதன்மை இயக்குனர் சந்தானம்,
மாணவர்களுக்கு தியானப் பயிற்சி அளித்தார். அப்போது, அவர் பேசியதாவது:மனம்
தான் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது; நமது அனைத்து வளர்ச்சிக்கும், மனமே
காரணம். எனவே, நாம் மனதை புரிந்து கொள்ள வேண்டும்; அப்போது தான்
பிரச்னைகளுக்கு தீர்வு வரும். வாழ்க்கையில் இன்பம், துன்பம் ஆகிய இரண்டும்
வரும்; இவற்றை எதிர்கொள்ள, அறிவை சரியாக பயன்படுத்த வேண்டும்; அதற்கு மனம்
உதவும்.சில நேரங்களில் மனம் நம்மை கெட்ட விஷயங்களை நோக்கி வேகமாக இழுத்துச்
செல்லும்; அதனை கட்டுப்படுத்தும் ஆற்றல் புத்திக்கு உள்ளது; அறிவையும்,
மனதையும் ஒழுங்குபடுத்துவது புத்தியாகும். தியானம் மூலம், மாணவர்கள் மனதை
ஒருமுகப்படுத்தினால், அதிக மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறவும், நடத்தையில்
சிறந்து விளங்கவும், லட்சியங்களை எளிதில் அடையவும் முடியும்.இவ்வாறு அவர்
பேசினார்.பயிற்சி வகுப்பில், பள்ளித் தலைமை
ஆசிரியர் ஆனந்தன், ஆசிரியர் அருள்தாஸ், கண்ணாடி தொழிற்சாலை மனித வள
மேம்பாட்டுத் துறை மேலாளர் ரிச்டு மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்