ADDED : ஜூலை 21, 2011 01:09 AM
நாமக்கல்: 'மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார வளமையத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொகுப்பூதியத்தில், 51 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்' என, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், ஒவ்வொரு வட்டார வள மையத்துக்கும் ஒரு கணினி விவரப்பதிவாளர், ஒரு கணினி வகைப்படுத்துநர் மற்றும் 50 பள்ளிக்கு ஒரு கணக்காளர் என மொத்தம், 51 பணியிடம் தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில், மாவட்ட கலெக்டர் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.அதற்கான நேர்காணல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இம்மாதம் 28ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு, 15ம் தேதி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரால் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


