ADDED : ஜூலை 11, 2011 03:03 AM
சேலம்: சேலம் மாநகர பகுதியில், புதிய படங்களின் 'சிடி'க்களை விற்பனை செய்த ஆறு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாநகரில் புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், அன்னதானப்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை, ஜங்ஷன் ஆகிய இடங்களில் திருட்டு சி.டி., ஒழிப்பு இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பிள்ளையார் கோவில் தெரு, மாவீரன், வேங்கை உள்ளிட்ட புதிய படங்களின் 'சிடி'க்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. புதுப்பட 'சிடி' விற்பனையில் ஈடுபட்ட அன்னதானப்பட்டியை சேர்ந்த சதீஸ், சுதாகர், சுந்தர், தாதகாப்பட்டியை சேர்ந்த சரவணன், பெருமாள், மணி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 7,000 ரூபாய் மதிப்புள்ள 'சிடி'க்களை பறிமுதல் செய்தனர்.