/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஊரக திறனாய்வு தேர்வுக்கு 2,054 பேர் விண்ணப்பம்ஊரக திறனாய்வு தேர்வுக்கு 2,054 பேர் விண்ணப்பம்
ஊரக திறனாய்வு தேர்வுக்கு 2,054 பேர் விண்ணப்பம்
ஊரக திறனாய்வு தேர்வுக்கு 2,054 பேர் விண்ணப்பம்
ஊரக திறனாய்வு தேர்வுக்கு 2,054 பேர் விண்ணப்பம்
ADDED : ஆக 29, 2011 01:07 AM
சேலம்: அரசு பள்ளி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வில் கலந்து கொள்ள
சேலம் மாவட்டத்தில், 2,054 மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளை
தவிர்த்து, ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்
மாணவ, மாணவியர்களுக்கு, ஆண்டு தோறும் ஊரக திறனாய்வு தேர்வு
நடத்தப்படுகிறது. எட்டாம் வகுப்பில், 50 சதவிகித மதிப்பெண் பெற்று தேறிய,
குடும்ப வருவாய் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள மாணவ, மாணவியர்
இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வில், மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட
அளவில் முதல் இடங்களை பெறும், 50 மாணவர்களும், 50 மாணவிகளும்
தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை நான்கு
ஆண்டுகளுக்கு, ஆயிரம் ரூபாய் உதவிதொகையாக வழங்கப்படும். இத்தேர்வுக்கான
விண்ணப்பங்கள் கடந்த இரு வாரங்களாக பெறப்பட்டு வந்தது. இத்தேர்வு,
செப்டம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கு, சேலம் மாவட்டத்தில்
இருந்து, 2,054 மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட, 300
மாணவர்கள் அதிகமாக, நடப்பாண்டில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த மாணவ,
மாணவியருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. சேலம்
மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களுக்கு ஒரு பள்ளி வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு,
ஆகஸ்ட் 20ம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை முதல் மதியம் வரை
சிறந்த ஆசிரியர்களை கொண்டு, இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.