/உள்ளூர் செய்திகள்/திருச்சி/"குரூப்-4' தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்"குரூப்-4' தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்
"குரூப்-4' தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்
"குரூப்-4' தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்
"குரூப்-4' தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்
ADDED : ஆக 08, 2011 02:46 AM
திருச்சி: திருச்சியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குரூப்-4 தேர்வில் 416 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது.
திருச்சி மாவட்டத்தில் ஐந்து மையங்களில் இந்த தேர்வு நடந்தது. 477 பேர் தேர்வில் பங்கேற்க விண்ணப்பம் செய்திருந்தனர். தில்லைநகர் கி.ஆ.பெ., விஸ்வநாதம், உறையூர் மெத்தடிஸ், எஸ்.எம்., மேலப்புதூர் புனித அன்னாள், புத்தூர் பிஷப் ஆகிய ஐந்து பள்ளிகளில் 416 பேர் தேர்வெழுதினர். இதில், 29 பேர் கண் பார்வையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மாற்றுத்திறனாளிகளுக்கான நடந்த குரூப்-4 தேர்வை திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, புனித அன்னாள் தேர்வு மையத்தை பார்வையிட்டார். டி.என்.பி.எஸ்.ஸி., தேர்வாணையகுழு உறுப்பினர் டாக்டர் பன்னீர்செல்வம் அனைத்து மையங்களிலும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.


