ADDED : ஜூலை 13, 2011 10:14 PM
மானாமதுரை : மானாமதுரை வைகை ஆறு கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது.
மானாமதுரை வைகை ஆற்றில் கை வைத்தால் தண்ணீர் வந்த காலம் மலையேறி, கண்ணீர் வடித்தாலும் தண்ணீர் கிடைக்காத வகையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. வைகை மேம்பாலத்திற்குகீழ் தொடர்ந்து மணல் சுரண்டப்பட்டதால் மண் வளம் குறைந்து புல் முளைத்த தரையாக மாறியுள்ளது. சாக்கடை, குப்பை கூளங்களை கொட்டுவதால் மண்வளம் பாதிக்கப்பட்டு கருவேலமரங்கள் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுவர்கள், விடுமுறை நாட்களில் கிரிக்கெட் ஆடும் தளமாக உள்ளது. சுற்றுப்புறத்தை காக்க வேண்டிய பேரூராட்சி நிர்வாகம், கரைகளை பேண வேண்டிய பொதுப்பணித்துறை நிர்வாகம், கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. கரையை ஆக்கிரமிக்கும் சிலர் வீடு,கோயில்,பள்ளிகளை கட்டிவருகின்றனர். கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிய வைகையின் பரப்பளவு சுருங்கி வருகிறது.


