ADDED : ஜூலை 24, 2011 09:14 PM
திண்டுக்கல் : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் வட்டார வரலாற்று ஆவண ஆய்வுக்குழுவில், அலுவல்சாரா உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இதுகுறித்த செய்தி குறிப்பு: வரலாற்று சங்கம், மையம் வைத்துள்ளோர், பத்திரிகை துறையில் புகழ் பெற்றவர், தேசிய உணர்வு, சுதந்திரப் போராட்ட கால தொடர்புடையவர், ஓய்வு பெற்ற வரலாற்று பேராசிரியர், வரலாற்று ஆர்வலர்கள் இக்குழுவில் சேரலாம். விரும்புவோர், சுய விபரங்களை, 'ஆராய்ச்சி அலுவலர், மாவட்ட ஆவணக் காப்பகம், மாநகராட்சி அலுவலகம், மூன்றாவது தளம், தல்லாகுளம், மதுரை' என்ற முகவரிக்கு ஜூலை 29 க்குள், அனுப்ப வேண்டும். இத்தகவலை ஆராய்ச்சி அலுவலர் கணேசன் தெரிவித்தார்.