ADDED : செப் 12, 2011 03:20 AM
இடைப்பாடி: இடைப்பாடி அருகே, அன்னை வேளாங்கண்ணி மாதா தேர்த்திருவிழா வெகு
விமரிசையாக நடந்தது.இடைப்பாடி அருகே, கொங்கணாபுரத்தில் உள்ள வேளாங்கண்ணி
மாதா ஆலயத்தில், ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடந்து
வருகிறது.
இந்த ஆண்டு திருவிழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன்
தொடங்கியது.ஒருவாரம் நடந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா,
நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், சேலம் அரிசிபாளையம் குழந்தையேசு
பேராலய பங்குத்தந்தை சிங்கராயன், இடைப்பாடி பங்குத்தந்தை ஜேக்கப்,
ராயப்பன், லியோ, சார்லஸ், செல்வநாயகம், சேகர், ரப்ரியேல் ஆசிரியர்கள்
வின்சென்ட், வில்லியம்ஸ் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்து
கொண்டனர்.