Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/எஸ்.எஸ்.குளம் பேரூராட்சியில் நான்கு முனைப்போட்டி

எஸ்.எஸ்.குளம் பேரூராட்சியில் நான்கு முனைப்போட்டி

எஸ்.எஸ்.குளம் பேரூராட்சியில் நான்கு முனைப்போட்டி

எஸ்.எஸ்.குளம் பேரூராட்சியில் நான்கு முனைப்போட்டி

ADDED : அக் 10, 2011 10:25 PM


Google News
அன்னூர் : எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி தலைவர் பதவி, தாழ்த்தப்பட்டோர் பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோகிலா (அ.தி.மு.க.,), கவிதா (தி.மு.க.,), வேல்விழி (காங்கிரஸ்), லதா (தே.மு.தி.க.,) ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர். 15 கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 69 பேர் போட்டியிடுகின்றனர். 1, 5, 9 ஆகிய வார்டுகளில் தலா 7 பேரும், குறைந்தபட்சமாக 6வது வார்டில் 2 பேரும் போட்டியிடுகின்றனர்.கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 4ல், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திலுள்ள 7 ஊராட்சிகள், அன்னூர் ஒன்றியத்திலுள்ள 6 ஊராட்சிகள் உள்ளன. இந்த வார்டில், தற்போதைய மாவட்ட கவுன்சிலர் மணிமேகலை (தி.மு.க.,), சங்கீதா (அ.தி.மு.க.,), பத்மாவதி (தே.மு.தி.க.,), ராதாமணி (பகுஜன் சமாஜ்) ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் இருந்த 8 ஊராட்சிகளில், விளாங்குறிச்சி ஊராட்சி, கோவை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டு விட்டது. அக்ரஹார சாமக்குளம் ஊராட்சியில் 1,925 வாக்காளர்களும், அத்திப்பாளையத்தில் 1,054, கள்ளிப்பாளையத்தில் 2140, கீரணத்தத்தில் 3,192, கொண்டையம்பாளையத்தில் 4,666, வெள்ளமடையில் 4,682, வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் 3,222 வாக்காளர் உள்ளனர்.அக்ரஹார சாமக்குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு 5 பேரும், அத்திப்பாளையத்தில் 2 பேரும், கள்ளிப்பாளையத்தில் 6 பேரும், கீரணத்தத்தில் 6 பேரும், கொண்டையம்பாளையத்தில் 4 பேரும், வெள்ளமடையில் 5 பேரும், வெள்ளானைப்பட்டியில் 3 பேரும் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். ஒன்றியத்தில் உள்ள 7 ஊராட்சிகளில், 10 ஆயிரத்து 308 பெண்கள் உள்பட 20 ஆயிரத்து 681 வாக்காளர்கள் உள்ளனர். ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 22 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்ட கவுன்சிலர், பேரூராட்சி தலைவர், 15 கவுன்சிலர், 7 ஊராட்சி தலைவர், 5 ஒன்றிய கவுன்சிலர், 60 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என, மொத்தம் 89 பதவிகளுக்கு, 352 பேர் போட்டியிடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us