Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மேற்கு தொடர்ச்சிமலையில் தீ; சதி செய்தவர்கள் யார் ?; திடுக் தகவல்

மேற்கு தொடர்ச்சிமலையில் தீ; சதி செய்தவர்கள் யார் ?; திடுக் தகவல்

மேற்கு தொடர்ச்சிமலையில் தீ; சதி செய்தவர்கள் யார் ?; திடுக் தகவல்

மேற்கு தொடர்ச்சிமலையில் தீ; சதி செய்தவர்கள் யார் ?; திடுக் தகவல்

ADDED : ஜூலை 14, 2011 03:56 PM


Google News
Latest Tamil News

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் மரம் வெட்டிய தடயங்களை அழிக்கவே, வனத்துறையினரின் சதியால் திட்டமிட்டு தீ விபத்தை ஏற்படுத்திருக்கலாம் என்ற



அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன. ராஜபாளையம் மேற்குத்தொடர்ச்சி மலையில் நீர் காத்த அய்யனார் கோயில் பகுதியிலிருந்து ஐந்து கி.மீ., துரத்தில் உள்ளது ராஜாம்பாரை பீட் பகுதி.இங்கு காட்டு தீ பரவி பல பகுதிகள் எரிந்து சாம்பலாகின. வனங்களில் மரங்கள் ஒன்றொடென்று உரசும் போது தீப்பற்றலாம். ஆனால் இங்கு அடர்ந்த வனப்பகுதிகள் தற்போது இல்லை. வனங்களில் செல்பவர்கள் சிகரெட் குடித்து அணைக்காமல் போடும் போதும் தீப்பற்றலாம். ஆடு, மாடு மேய்ப்பவர்கள் அடர்ந்த புல் வளர்வதற்கு தரகு புற்களில் தீ வைப்பர். வன உயிரினங்கள் வாழும் இங்கு மனிதர்கள் நடமாட, மாடு மேய்ச்சலுக்கு அனுமதி இல்லை. ' முல்லை பெரியாறு பகுதியில் இருந்து கயத்தாறு பகுதிக்கு உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கின்றன. இந்த கம்பிகள் உரசியதால் தீப்பற்றியிருக்கலாம்,' என , வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்<, ''உயர் அழுத்த மின் கம்பிகள் 150 மீட்டர் உயரத்திற்கு மேல் தான் செல்கின்றன. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மின் வாரியத்தினர் பராமரிப்பு பணிகளை செய்து, மரங்கள் உரசும் நிலை இருந்தால் கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபடுவர். மின் கம்பிகளில் இருந்து விழுந்த தீப்பொறியாலோ ,கம்பிகள் உரசியதாலும் தீப்பிடிக்க 99 சதவீதம் வாய்ப்பில்லை<,'' என்றார்.



ராஜபாளையம் வனப்பகுதியில் வன விலங்குகள் குறித்து கணக்கெடுப்பு பணிகடந்த மாதம் நடந்தது. இதில் வனத்துறை ஆர்வலர்களும் வனத்துறையினருடன் இணைந்து பணியாற்றினர். வனப்பகுதியில் அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதை பார்த்த வன ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக முதன்மை வனப்பாதுகாவலருக்கு போட்டோவுடன் புகாரும் அனுப்பினர். அதன்படி முதன்மை வனப்பாதுகாவலரும் ராஜபாளையம் வனத்தில் மரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி ஆய்வு பணி நடத்த,வேறு மண்டலத்தில் உள்ள அதிகாரிகளை நியமித்துள்ளார். ஆனால் இந்த குழு ஆய்வுக்கு வருவதற்கு முன்பே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மரம் வெட்டியதற்கான தூர் பகுதிகள் அதிகாரிகள் ஆய்வில் தெரிந்து விடும் என்பதால் , தூர் பகுதிகள் தெரியாமல் அழிப்பதற்காக , திட்டமிட்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக, வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.



வனத்துறை காட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ எதனால் ஏற்பட்டது, உண்மைக்காரணம் என்ன? என்பது குறித்து ,மேல் மட்ட அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து,இதன் மீது தீவிர விசாரணை மேற்கொண்டால் உண்மை தகவல் வெளி வரலாம் .



விருதுநகர் மாவட்ட வன பாதுகாவலர் அசோக்குமார் கூறுகையில்<, '' இப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதாக பல புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மரங்கள் வெட்டப்பட்டதாகவும், அதை மறைப்பதற்கு வனத்துறையினர் தீ வைத்துள்ளதாக பொய்யான தகவலை சிலர் பரப்பி வருகின்றனர். மண்டல அளவிலான அதிகாரிகள் குழு வெளி மாவட்டங்களில் இருந்து வந்து ஆய்வு செய்து விசாரணை செய்கின்றனர். மின் வயரால் தான் தீவிபத்து ஏற்பட்டுள்ளது , ''என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us