துப்பாக்கி சூடு விசாரணை: நீதிபதிக்கு கருப்புக்கொடி
துப்பாக்கி சூடு விசாரணை: நீதிபதிக்கு கருப்புக்கொடி
துப்பாக்கி சூடு விசாரணை: நீதிபதிக்கு கருப்புக்கொடி
ADDED : செப் 27, 2011 11:45 PM
பரமக்குடி: பரமக்குடி கலவரம் தொடர்பாக, விசாரணை நடத்த சென்ற ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத்திற்கு கிராமத்தினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
பரமக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அரசு விசாரணை கமிஷன் அமைத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் பரமக்குடியில் நேற்று விசாரணையை துவங்கினார். பரமக்குடி கீழகொடுமலூர், வீரம்பல், சடையனேரி ஆகிய ஊர்களுக்கு சென்றுவிட்டு, துப்பாக்கி சூட்டில் இறந்த மஞ்சூர் ஜெயபால் குடும்பத்தினரை சந்திக்க,நேற்று மாலை 6.30 மணிக்கு அந்த ஊருக்கு சென்றார். இதை அறிந்த அந்த கிராமத்தினர் ஒன்றுதிரண்டு, கருப்புக் கொடியுடன் ரோட்டிற்கு வந்தனர். அவர்கள், 'எங்களுக்கு நீதி விசாரணை தேவையில்லை' என கோஷமிட்டனர். இதனால் நீதிபதி சம்பத், மஞ்சூருக்கு செல்லாமல் ராமநாதபுரம் திரும்பினார்.