/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/புதுகை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் 22பேர் காயம்புதுகை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் 22பேர் காயம்
புதுகை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் 22பேர் காயம்
புதுகை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் 22பேர் காயம்
புதுகை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் 22பேர் காயம்
ADDED : செப் 01, 2011 11:37 PM
ஆலங்குடி: புதுக்கோட்டை அருகே திருமண கோஷ்டியினர் சென்ற லோடு ஆட்டோ (டாடா ஏஸ்) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட 22 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த குளப்பன்பட்டியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக அருகில் உள்ள இடையாத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் நேற்றுக்காலை 9 மணியளவில் லோடு ஆட்டோ ஒன்றில் சென்றுள்ளனர்.
விழா முடிந்து இவர்கள் அனைவரும் அதே ஆட்டோவில் நேற்று மாலை 4.30 மணிக்கு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
புதுப்பட்டி சமத்துவபுரம் அருகே வந்தபோது நிலை தடுமாறிய ஆட்டோ ரோட்டோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள் உட்பட 22 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த அமிர்தம்(50) செல்வபெருமாள்(46), பால்ராஜ்(22) உட்பட 12 பேரை அப்பகுதியினர் மீட்டு '108' ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து கறம்பக்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.


