/உள்ளூர் செய்திகள்/சேலம்/மலையில் 600 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு வீரபாண்டி ஆறுமுகம், தங்கபாலு மீது புகார்மலையில் 600 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு வீரபாண்டி ஆறுமுகம், தங்கபாலு மீது புகார்
மலையில் 600 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு வீரபாண்டி ஆறுமுகம், தங்கபாலு மீது புகார்
மலையில் 600 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு வீரபாண்டி ஆறுமுகம், தங்கபாலு மீது புகார்
மலையில் 600 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு வீரபாண்டி ஆறுமுகம், தங்கபாலு மீது புகார்
ADDED : செப் 13, 2011 02:06 AM
சேலம்: ''மாஜி அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், செல்வகணபதி மற்றும் காங்., தலைவர் தங்கபாலு ஆகியோர் கல்வராயன் மலையில், 600 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர்,'' என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழக அரசு, நெல்லுக்கான விலையை இதுவரை அறிவிக்கவில்லை.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை துவங்கி உள்ளது. தமிழகத்தில் உரம், டீஸல் ஆகியவற்றின் விலை உயர்ந்ததால், உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன், நெல்லுக்கான கொள்முதல் விலையை, 1,500 ரூபாயாக நிர்ணயித்து அறிவிக்க வேண்டும்.தமிழகத்தில், கரும்பு விவசாயிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை கூட்டி, கரும்பு விலை டன்னுக்கு, 3,000 ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். சேலம், தர்மபுரி உள்பட, 10 மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு மூட்டை, 200 ரூபாய்க்கு விற்கிறது. அதன் விலையை அதிகரிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தை அரசு ரத்து செய்து உள்ளது. அதற்கு மாற்றாக உழவர் பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மாநில அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து, வரும் 19ம் தேதி அனைத்து வருவாய் அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.சேலம் கல்வராயன் மலையில், 400 ஏக்கர் நிலம் மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரின் குடும்ப உறுப்பினர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மாஜி அமைச்சர் செல்வகணபதி ஆகியோரும் கல்வராயன் மலைப் பகுதியில் தலா, 100 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த நிலங்களை மீட்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் ராஜகோபால், செயலாளர் தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.