/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு பொள்ளாச்சியில் உண்ணாவிரதம்அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு பொள்ளாச்சியில் உண்ணாவிரதம்
அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு பொள்ளாச்சியில் உண்ணாவிரதம்
அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு பொள்ளாச்சியில் உண்ணாவிரதம்
அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு பொள்ளாச்சியில் உண்ணாவிரதம்
ADDED : ஆக 25, 2011 11:36 PM
பொள்ளாச்சி : ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பொள்ளாச்சியில், 'சிறு வியாபாரிகள் சங்கம்' சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
பொள்ளாச்சியில் நியூஸ்கீம் ரோடு - பல்லடம் ரோடு சந்திப்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு, சிறு வியாபாரிகள் சங்க தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். பொருளாளர் செல்வராஜ் வரவேற்றார். செயலாளர் ஹரிகிருஷ்ணன், துணைத்தலைவர் முத்துக்குமார், நிர்வாகிகள் விஜயகுமார், ஞானராஜ், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது: வலிமையான 'ஜன் லோக்பால்' மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, டில்லியில் 10 நாட்களாக அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்து வருகிறது. ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்று அவர் கூறுகிறார். நாட்டு மக்களின் எண்ணத்தை அவர் பிரதிபலிக்கிறார். அவரது கோரிக்கை நிறைவேறும் வரையிலும் மக்கள் அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும் என, வலியுறுத்தினர்.