
சென்னை : ''விலை இல்லா அரிசி மட்டுமின்றி கோதுமை, சர்க்கரை, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்கள், பொதுமக்களுக்கு தடையின்றி வழங்கப்படும்,'' என, சட்டசபையில் அமைச்சர் புத்திசந்திரன் தெரிவித்தார்.
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர் புத்திசந்திரன் பதிலளித்து பேசியதாவது: 'மக்களுக்கு ரேஷன் கார்டுகள் எளிதாக கிடைக்க வேண்டும்; ரேஷன் பொருட்கள் எடையை குறைத்து வழங்கக் கூடாது' என, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு, நமக்கு தர வேண்டிய மண்ணெண்ணெய் அளவைக் குறைத்துள்ளது. தற்போது, மாநிலத்திற்கு, 65 ஆயிரத்து, 140 லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. மத்திய அரசு, 44 ஆயிரத்து, 572 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்குகிறது. தேவையான அளவு மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என, பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அமைச்சர் புத்திசந்திரன் பேசினார்.