/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/முதல்வர் அறிவிப்பை பாராட்டும் எதிர்க்கட்சி தலைவர் கோபி விழாவில் செங்கோட்டையன் பெருமிதம்முதல்வர் அறிவிப்பை பாராட்டும் எதிர்க்கட்சி தலைவர் கோபி விழாவில் செங்கோட்டையன் பெருமிதம்
முதல்வர் அறிவிப்பை பாராட்டும் எதிர்க்கட்சி தலைவர் கோபி விழாவில் செங்கோட்டையன் பெருமிதம்
முதல்வர் அறிவிப்பை பாராட்டும் எதிர்க்கட்சி தலைவர் கோபி விழாவில் செங்கோட்டையன் பெருமிதம்
முதல்வர் அறிவிப்பை பாராட்டும் எதிர்க்கட்சி தலைவர் கோபி விழாவில் செங்கோட்டையன் பெருமிதம்
கோபிசெட்டிபாளையம்: ''தமிழக சட்டசபை புதிய கட்டிடத்தை டில்லி மருத்துவமனை போல் ஆக்கப்படும் என முதல்வர் அறிவித்ததை, எதிர்க்கட்சி தலைவர் முதல் அனைவரும் பாராட்டுகின்றனர்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
தற்போது வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமானதாக உள்ளது. இதை யாரும் கால்நடைத் தீவனமாக பயன்படுத்தவில்லை. முந்தைய ஆட்சியில் கட்டப்பட்ட சட்டசபை புதிய கட்டிடம், டில்லி மருத்துவமனை போல் ஆக்கப்படும் என, முதல்வர் அறிவித்ததை, எதிர்க்கட்சி தலைவர் பண்ருட்டி முதல் அனைவரும் பாராட்டினர். தமிழக மக்களின் நலனுக்காக முதல்வரின் ஆட்சி மின்னல் வேகத்தில் செல்கிறது. இவ்வாறு அவர் பேசினார். கலெக்டர் காமராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகா வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் ரமணீதரன், வெங்கடாசலம், ஆர்.டி.ஓ., பழனிசாமி, தாசில்தார் முருகன், முன்னாள் எம்.பி., காளியப்பன், முன்னாள் வாரிய தலைவர் சிந்துரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா மேடைக்கு அமைச்சர் வந்தபோது, 500க்கும் மேற்பட்ட மக்கள், அவரை சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.


