Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நூற்பாலைகளில் இன்று முதல் உற்பத்தி முற்றிலும் நிறுத்தம் :"சிஸ்பா' தலைவர் தகவல்

நூற்பாலைகளில் இன்று முதல் உற்பத்தி முற்றிலும் நிறுத்தம் :"சிஸ்பா' தலைவர் தகவல்

நூற்பாலைகளில் இன்று முதல் உற்பத்தி முற்றிலும் நிறுத்தம் :"சிஸ்பா' தலைவர் தகவல்

நூற்பாலைகளில் இன்று முதல் உற்பத்தி முற்றிலும் நிறுத்தம் :"சிஸ்பா' தலைவர் தகவல்

ADDED : ஜூலை 13, 2011 10:43 PM


Google News
கோவை : ''தேவைக்கு மேல் உற்பத்தி அதிகம் உள்ள காரணத்தால் இன்று முதல் சங்க உறுப்பினர்களின் நூற்பாலைகளில் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தி வைப்பதென முடிவு செய்துள்ளோம்,'' என, 'சிஸ்பா' தலைவர் தேவராஜன் தெரிவித்தார்.தென்னிந்திய சிறு நூற்பாலைகள் சங்கம் 'சிஸ்பா' தலைவர் தேவராஜன் கூறியதாவது: கடுமையான நூல் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தமிழக நூற்பாலைகளில் நூல் விற்காமல் தேக்கமடைந்துள்ளது.

வங்கியின் வட்டி விகிதம் குறுகிய காலத்தில் பலமுறை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2010-11ம் ஆண்டு துவக்கத்தில் பஞ்சின் கையிருப்பு 40 லட்சம் பேல்களாக இருந்தது. மத்திய அரசு, 'நடப்பாண்டில் 350 லட்சம் பேல்கள் உற்பத்தியாகும்' என உத்தேச அடிப்படையில் கணக்கெடுத்து, அதில் 55 லட்சம் பேல்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும், இதை 2010 செப்., 1 முதல் ஏற்றுமதிக்கு பதிவு செய்து அக்., 15க்குள் ஏற்றுமதி செய்ய உத்தரவிட்டது.தொடர்மழை காரணமாகவும், இயற்கை மாற்றத்தாலும் எதிர்பார்த்த அளவு பஞ்சு வரத்து இல்லை; ஏற்றுமதி செய்யவும் முடியவில்லை. உள்நாட்டு தேவையும் அதிகரித்ததால் பஞ்சு ஏற்றுமதிக்கான காலத்தை மத்திய அரசு நீட்டித்தது. இதனால் கண்டிக்கு 30 ஆயிரம் ரூபாயாக இருந்த பஞ்சு விலை 64 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. 2011 ஆக., செப்., மாதங்களில் ஏராளமான பஞ்சு பற்றாக்குறை ஏற்படும் என அனைத்து தரப்பிலும் தவறான புள்ளி விவரங்கள் அளிக்கப்பட்டதால், நூற்பாலைகள் வங்கிகளில் கூடுதல் நடப்பு மூலதனம் பெற்று அதிகவிலை கொடுத்து பஞ்சு கொள்முதல் செய்து இருப்பு வைத்தனர். இந்திய பருத்தி கழகம் (சி.சி.ஐ) சந்தை விலையை விட 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கண்டிக்கு அதிக விலை நிர்ணயித்து தனியார் வர்த்தகர் போல் வர்த்தகம் செய்து வந்தது. இந்நிர்ணய அடிப்படையில் பஞ்சின் சந்தை விலை நிர்ணயிக்கப்படுகிறது. பஞ்சு விலை உயர்வுக்கு சி.சி.ஐ., யின் செயல்பாடு முக்கிய காரணமாக அமைந்தது.இத்தகைய சூழ்நிலையில், கடந்த ஏப்., மாதம் முதல் பஞ்சுவிலை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் அதிக விலை கொடுத்து பஞ்சு கொள்முதல் செய்த ஆலைகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திந்து வருகின்றன. பருத்தி நூல் உற்பத்தி, உள்நாட்டு தேவையை விட 30சதவீதம் அதிகரித்துள்ளது. ஆண்டு முழுவதும் நூல் ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டால் தான் நாட்டின் உற்பத்தியும், நூல் பயன்பாடும் சீராக இருக்கும். தற்போதுள்ள சந்தை விலையில் பஞ்சு கொள்முதல் செய்து, உற்பத்தி செய்யும் நூலின் சந்தை விலையை ஒப்பிடும் போது கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. தேவைக்கு மேல் உற்பத்தி அதிகம் உள்ள காரணத்தால் உற்பத்தி குறைப்பதை தவிர வேறு வழியில்லை. பல நூற்பாலைகள் நெருக்கடியை சந்தக்க முடியாமல் தாமாகவே ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்து வருகின்றனர். பல நூற்பாலைகள் 40 முதல் 50 சதவீதம் வரை உற்பத்தி குறைப்பு செய்துள்ளனர்.வேறு வழியில்லாத நிலையில், இன்று முதல் சங்க உறுப்பினர்களின் நூற்பாலைகளில் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தி வைப்பதென முடிவு செய்துள்ளோம். ஏற்றுமதி செய்யும் பருத்தி நூலுக்கு வழங்கி வந்த அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். சாயபட்டறை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பிராண்டட் ஆயத்த ஆடைகள் மீது விதிக்கப்பட்டுள்ள 10.3 சதவீத கலால் வரியை நீக்க வேண்டும். தற்போதுள்ள வங்கி வட்டி வகிதத்தை 15 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இத்துறையை சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us