மஞ்சநாயக்கன்பட்டி பால்குட அபிஷேகம்
மஞ்சநாயக்கன்பட்டி பால்குட அபிஷேகம்
மஞ்சநாயக்கன்பட்டி பால்குட அபிஷேகம்
பழநி : மஞ்சநாயக்கன்பட்டி உச்சிமாகாளியம்மன் கோயில் விழாவில், பக்தர்கள் பால்குட அபிஷேகம் செய்தனர்.
தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு
பழநி : பெரியகலையம்புத்தூர் மகாலட்சுமி அம்மன் கோயிலில், ஏராளமான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி செலுத்தினர். இங்கு ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடக்கிறது.
விரிவாகிறது வன எல்லை
பழநி : ஆண்டிபட்டி வனப்பகுதியுடன் 1,200 ஏக்கரை இணைப்பதற்கான ஆய்வு ஆக., 19 ல் நடக்கிறது.
கார்- பஸ் மோதல் : குழந்தை பலி
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே கார் மீது அரசு பஸ் மோதி மகாராஷ்டிராவை சேர்ந்த குழந்தை இறந்தது. மகாராஷ்டிரா கருநகி பகுதியை சேர்ந்தவர் விட்டல் கிஷன்பாபர். மனைவி ராணி, குழந்தை ஆதித்யா (7), டிரைவர் ராஜாராம் மோரே ஆகியோர் மதுரைக்கு சுற்றுப்பயணம் சென்று, கோயம்புத்தூருக்கு புறப்பட்டனர். மாருதி ஸ்விட் காரில் நேற்று மாலை 4 மணிக்கு, திண்டுக்கல் தோமையார்புரம் அருகே, அரசு பஸ்சின் பின்புறம் மோதியது. இதில் குழந்தை இறந்தது. மற்றவர்கள் காயமடைந்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.