Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/தபால் சிறுசேமிப்பு ஏஜன்ட்கள் உண்ணாவிரதம்

தபால் சிறுசேமிப்பு ஏஜன்ட்கள் உண்ணாவிரதம்

தபால் சிறுசேமிப்பு ஏஜன்ட்கள் உண்ணாவிரதம்

தபால் சிறுசேமிப்பு ஏஜன்ட்கள் உண்ணாவிரதம்

ADDED : ஆக 28, 2011 12:39 AM


Google News

மதுரை : மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் சியாமளா கோபிநாத் பரிந்துரையை ரத்து செய்யக்கோரி, மதுரையில் தபால் சிறுசேமிப்பு ஏஜன்ட்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

ஏஜன்ட்களின் ஒரு சதவிகித கமிஷனை 0.05 சதவீதமாக குறைத்தும், மகளிர் ஏஜன்ட்களின் நான்கு சதவிகித கமிஷனை படிப்படியாக குறைத்து, ஒரு சதவிகிதமாக ஆக்கவும், பி.பி.எப்., முகவாண்மையை ரத்து செய்யவும் சியமளா கோபிநாத் பரிந்துரை செய்துள்ளார். ஏஜன்ட்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான இந்த பரிந்துரையை ரத்து செய்யக்கோரி, மதுரையில் நடந்த உண்ணாவிரதத்திற்கு சங்க தலைவர் மோதிலால் தலைமை வகித்தார். செயலாளர் வனஜா, துணை பொருளாளர் பாலகுமார் முன்னிலை வகித்தனர். அண்ணாதுரை எம்.எல்.ஏ., துவக்கினார். காங்., முன்னாள் நகர் செயலாளர் சொக்கலிங்கம், வரதராஜன், பாலாஜி, இல.அமுதன் பேசினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us