/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரி டவுன் பகுதியில் 106 இடங்களில் விநாயகர் சிலைதர்மபுரி டவுன் பகுதியில் 106 இடங்களில் விநாயகர் சிலை
தர்மபுரி டவுன் பகுதியில் 106 இடங்களில் விநாயகர் சிலை
தர்மபுரி டவுன் பகுதியில் 106 இடங்களில் விநாயகர் சிலை
தர்மபுரி டவுன் பகுதியில் 106 இடங்களில் விநாயகர் சிலை
தர்மபுரி: தர்மபுரி டவுன் பகுதியில் 106 இடங்களில் விநாயகர் சிலை அமைக்க ஹிந்து அமைப்புகள் சார்பில் போலீஸ் அனுமதி கேட்டுள்ளனர்.
சிலை வைத்து ஐந்து நாட்களுக்குள் எடுத்து விட வேண்டும். நீர்நிலையில் கரைப்பதற்காக சிலை எடுத்து செல்லும் வாகனத்தில் ஐந்து பேர் மட்டுமே செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது யாரும் மது அருந்த கூடாது. மசூதி மற்றும் தேவாலயங்கள் அருகே சிலை எடுத்து செல்லும் போது பட்டாசு மற்றும் கோஷங்கள் எழுப்ப கூடாது. ஊர்வலத்தை கண்காணிக்க செக்போஸ்ட்டில் போலீஸார் நிறுத்தப்படுவர். தர்மபுரி டவுன் பகுதியில் 106 இடங்களிலும், அதியமான்கோட்டையில் 52 இடங்கள், மதிகோன்பாளையத்தில் 38, தொப்பூரில் 50, கிருஷ்ணாபுரத்தில் 37 மற்றும் காரிமங்கலத்தில் 28 இடங்களில் சிலை அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. சிலைகளை மாலை 6 மணிக்குள் நீர்நிலைகளில் கரைத்துவிட வேண்டும். விதிமுறைகளை அனைத்து விழாகுழுவினரும் மதித்து நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இன்ஸ்பெக்டர்கள் சம்பத்குமார் (மதிகோன்பாளையம்), ஜெகநாதன் (காரிமங்கலம்), அசோக்குமார் (அதியமான்கோட்டை), கபிலன் (தொப்பூர்) உட்பட பலர் கலந்துகொண்டனர்.