/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கோயில் அருகே கழிவுநீர் தேக்கம்: பக்தர்கள் அவதிகோயில் அருகே கழிவுநீர் தேக்கம்: பக்தர்கள் அவதி
கோயில் அருகே கழிவுநீர் தேக்கம்: பக்தர்கள் அவதி
கோயில் அருகே கழிவுநீர் தேக்கம்: பக்தர்கள் அவதி
கோயில் அருகே கழிவுநீர் தேக்கம்: பக்தர்கள் அவதி
ADDED : ஜூலை 24, 2011 09:13 PM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் காமா ட்சி அம்மன் கோயில் காம்பவுண்ட் சுவரை சுற்றி கழிவு நீர் தேங்கி உள்ளதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஒட்டன்சத்திரம் காமா ட்சி அம்மன் கோயில், பழநி தண்டாயுதபாணி தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கோயிலின் கிழக்கு பகுதியில் காம்பவுண்ட் சுவரை சுற்றி ஒரு ஓடை செல்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அருகிலுள்ள மலைப்பகுதியிலிருந்து மழை நீர் இந்த ஓடை வழியாக சின்னக்குளத்தில் சேர்ந்தது. தொடர் ஆக்கிரமிப்பு காரணமாக இந்த ஒடை கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. கோயில் முன்பு உள்ள பாலத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவு நீர் கோயில் முன்பு தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
பிளாஸ்டிக் கழிவுகள் பெரும்பாலும் அதில் உள்ளன. இதனால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் நீண்ட நாட்கள் தேங்கி இருப்பதால் கோயில் பகுதியில் துற்நாற்றம் வீசுகிறது.
இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்துடன் சாமி கும்பிட வேண்டிய நிலையில் உள்ளனர். ஓடையில் உள்ள அடைப்புகளை அகற்றி கழிவுநீர் தேங்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.