கூட்டுறவு சங்கங்களில் சேவை மையம் :பாடப்புத்தக நகல் எடுப்போர் அதிகரிப்பு
கூட்டுறவு சங்கங்களில் சேவை மையம் :பாடப்புத்தக நகல் எடுப்போர் அதிகரிப்பு
கூட்டுறவு சங்கங்களில் சேவை மையம் :பாடப்புத்தக நகல் எடுப்போர் அதிகரிப்பு
ADDED : செப் 01, 2011 02:06 AM
விருதுநகர் : கிராம தொடக்க கூட்டுறவு சங்கங்களில் துவக்கப்பட்டுள்ள, பொது சேவை மையங்களில், பாடப்புத்தக நகல் பெறுவது அதிகரித்துள்ளது.
கூட்டுறவுத்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில், பொது சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில், கம்ப்யூட்டருடன் இணைய தள இணைப்பு பெறப்பட்டு, பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். இதில், பட்டா, சிட்டா, அடங்கல் நகல், 'இ' டிக்கெட் பதிவு, ஆன் லைனில் கோரிக்கை மனுக்கள், கம்ப்யூட்டர் ஜாதகம், உடனடியாக பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பயிற்சி பெற்ற பணியாளர்கள் இந்த பணிகளை செய்கின்றனர். மாணவர்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்காத நிலையில், செப்., 22 ல் காலாண்டு தேர்வு துவங்குவதாக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு பாட நூல் நிறுவனமோ இணையதளத்தில் அனைத்து புத்தகங்களையும் வெளியிட்டுள்ளன. பல பள்ளி மாணவர்கள், தங்களுக்கு தேவையான புத்தக நகலை, கிராம பொது சேவை மையங்களில் இருந்து எடுத்து செல்கின்றனர். இதனால், சேவை மையங்களுக்கு கிராம மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.