/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உள்ளாட்சி தேர்தல் பணிக்கு அலுவலர்கள் நியமனம் :27ல் முதற்கட்ட ஆலோசனைஉள்ளாட்சி தேர்தல் பணிக்கு அலுவலர்கள் நியமனம் :27ல் முதற்கட்ட ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல் பணிக்கு அலுவலர்கள் நியமனம் :27ல் முதற்கட்ட ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல் பணிக்கு அலுவலர்கள் நியமனம் :27ல் முதற்கட்ட ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல் பணிக்கு அலுவலர்கள் நியமனம் :27ல் முதற்கட்ட ஆலோசனை
ADDED : ஆக 25, 2011 11:51 PM
உடுமலை : குடிமங்கலம் ஒன்றியத்தில், உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக தேர்தல்
நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வரும் 27 ம் தேதி முதற்கட்ட ஆலோசனை
கூட்டம் நடக்கிறது. குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள், 13 ஊராட்சி
ஒன்றிய வார்டு மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வார்டு உள்ளது. 23
ஊராட்சி தலைவர்கள், 201 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், இதர உள்ளாட்சி
பதவிகளுக்கான தேர்தல் நடத்த ஒன்றிய அதிகாரிகள் பணிகளை
தீவிரப்படுத்தியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் நடத்தும்
அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உத்தரவுகள் அலுவலர்களுக்கு
வினியோகிக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலராக
பி.டி.ஒ., நியமிக்கப்பட்டுள்ளார். ஊராட்சி பதவிகளுக்கான உதவி தேர்தல்
நடத்தும் அலுவலராக சிறுசேமிப்பு திட்ட உதவி இயக்குனர் (திருப்பூர்), மாவட்ட
ஊராட்சி உறுப்பினர் வார்டுக்கு பெதப்பம்பட்டி வட்டார வேளாண்மை உதவி
இயக்குனரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு உதவி தேர்தல்
நடத்தும் அலுவலராக பி.டி.ஒ., (ஊராட்சி) மற்றும் ஒன்றிய பொறியாளர்
நியமிக்கப்பட்டுள்ளனர். குடிமங்கலம் பி.டி.ஒ., மணிவண்ணன் கூறுகையில்,
குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 126 ஓட்டுச்சாவடிகள்
அமைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அலுவலகத்தில் தேர்தலுக்கு தேவையான
ஓட்டுப்பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. 600 சிறிய அளவிலான பெட்டிகளும்,
100 நடுத்தர ரக பெட்டிகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஒன்றியத்திலுள்ள
ஊராட்சிகளில் சோமவாரப்பட்டி ஊராட்சியில் அதிகபட்சமாக 12 ஊராட்சி வார்டுகள்
உள்ளன. குப்பம்பாளையம் மற்றும் ஆத்துக்கிணத்துப்பட்டியில் குறைந்தபட்சமாக 6
வார்டுகள் உள்ளன. பணிகளில் ஈடுபடும் உதவி தேர்தல் நடத்தும்
அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்
அடிப்படையில் வரும் 27ம் தேதி பெதப்பம்பட்டியிலுள்ள ஒன்றிய அலுவலகத்தில்
நடைபெற உள்ளது என்றார்.
குடிமங்கலம் ஒன்றியத்தில், உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக அலுவலர்கள்
நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் தரப்பில் தேர்தல் பணிகள்
தீவிரமடைந்துள்ளன.