தமிழக - கேரள எல்லையில் நிலச்சரிவு : மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு
தமிழக - கேரள எல்லையில் நிலச்சரிவு : மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு
தமிழக - கேரள எல்லையில் நிலச்சரிவு : மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு

கூடலூர் : தமிழக - கேரளா எல்லையில், நாடுகாணியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல், மூன்று மாநில போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நாடுகாணியிலிருந்து, 5வது கிலோ மீட்டரில், தமிழக - கேரளா நுழைவாயில் பகுதியில், ஏற்பட்ட பெரும் மண் சரிவால், இரவு 8.45 மணி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மரம் விழுந்ததில் அங்கிருந்த டீக்கடை நாசமானது. மண்சரிவால், இரவு முதல் தமிழக, கேரள, கர்நாடக மாநிலங்களின் போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை மற்றும் தீயணைப்புத் துறை ஊழியர்கள், அப்பகுதிக்கு சென்று, மரங்களை அகற்றினர். நேற்று காலை முதல், மண் குவியல்களை அகற்றும் பணி துவங்கப்பட்டது. பாறைகளை அகற்ற சிரமம் ஏற்பட்டுள்ளதால், நேற்று மாலை வரை, வாகன போக்குவரத்து துவங்கப்பட வில்லை.
நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் சுரேஷ்குமார் கூறுகையில்,'பாறைகளை கம்ப்ரசர் மூலம் துளையிட்டு அல்லது வெடி வைத்து உடைத்து, வாகன போக்குவரத்து துவங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்' என்றார்.