/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கடத்தப்பட்ட 3 குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீஸ் விசாரணைகடத்தப்பட்ட 3 குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீஸ் விசாரணை
கடத்தப்பட்ட 3 குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீஸ் விசாரணை
கடத்தப்பட்ட 3 குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீஸ் விசாரணை
கடத்தப்பட்ட 3 குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 15, 2011 10:06 PM
தேவகோட்டை: கடத்தி வரப்பட்ட மூன்றுகுழந்தைகளுடன் தப்பிய பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள சருகணிக்கு சில நாட்களுக்கு முன்பு மதுரை வண்டியூரைச் சேர்ந்த தேவி என்பவர், 3 வயதுள்ள குழந்தை, ராஜ்குமார் (13), ரோஜா(12) ஆகியோருடன் வந்துள்ளார். ராஜ்குமார், சரோஜாவை அங்குள்ள விடுதி வசதியுடன் கூடிய பள்ளியில் சேர்த்துள்ளார். விடுதியில் ராஜ்குமார் மற்றொரு மாணவரின் கடிகாரத்தை திருடியுள்ளார். நிர்வாகத்தினர், ராஜ்குமாரிடம் விசாரித்தபோது, ஏற்கனவே குற்றங்கள் செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்ததும், இவரை விட்டு சென்ற பெண் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததும், அந்த பெண்ணிடமிருந்த குழந்தை மதுரை வண்டியூரில் இருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
நேற்று முன்தினம் அந்த பெண்ணை பள்ளி நிர்வாகத்தினர் வரவழைத்து, ராஜ்குமார், சரோஜாவை பள்ளியை விட்டு நீக்கி சான்றிதழ் வழங்கி அனுப்பினர். அந்த பெண்ணை சருகணி கிராமத்தினர், சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் அந்த பெண் குழந்தைகளுடன் தப்பி விட்டார். விசாரணையில் தப்பிய பெண் புதுக்கோட்டை மாவட்டம் மீசலில் உறவினர் வீட்டில் தங்கி இருப்பது தெரிந்து, போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.


