2 ம் நாளாக தோப்பில் புகுந்த யானைகள்
2 ம் நாளாக தோப்பில் புகுந்த யானைகள்
2 ம் நாளாக தோப்பில் புகுந்த யானைகள்
ADDED : செப் 14, 2011 05:20 AM
பழநி : பழநியில் இரண்டாம் நாளாக தோப்பில் புகுந்த யானைக்கூட்டம் வீடு, மரங்களை சேதப்படுத்தின.
பழநி அண்ணா நகர் பகுதியில் மா, கொய்யா, தென்னந்தோப்புகள் உள்ளன. நேற்று முன்தினம் 11 யானைகள் இப்பகுதியில் புகுந்தன. டாக்டர் வனசேகரின் தென்னந்தோப்பில், 80 க்கும் மேற்பட்ட மரங்கள், காவலாளி பொன்னுச்சாமியின் கூரை வீட்டை சேதப்படுத்தின. இந்நிலையில், மீண்டும் நேற்று இரவு இப்பகுதிக்கு வந்தன. ஆயக்குடி ஹனீபாவின் மாந்தோப்பில் புகுந்து, 30 க்கும் மேற்பட்ட மரங்களை முறித்துச் சேதப்படுத்தின. காவலாளி ராமசாமியின் வீடு, சாய்பாபா கோயில் சுற்றுச்சுவர், பக்கத்து தோட்டத்தில் இருந்த சோலார்வேலியை சேதப்படுத்தின.