/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/இலத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜனம்இலத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜனம்
இலத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜனம்
இலத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜனம்
இலத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜனம்
ADDED : செப் 03, 2011 02:42 AM
புளியரை:இலத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜனம் நடந்தது.இலத்தூரில் விநாயகர்
சதுர்த்தியை முன்னிட்டு இந்து நற்பணி மன்றத்தினரால் வீர விநாயகர் சிலை
பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டனர்.
இந்த வீரவிநாயகர் சிலை நேற்று இந்து
நற்பணி மன்றம் மற்றும் நண்பர்கள் குழுவினரால் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன்
இலத்தூர் சுற்றுவட்டார ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
அதன்பின்னர் இலத்தூர் பெரியகுளத்தில் விசர்ஜனம் செய்தனர்.பாதுகாப்பு
ஏற்பாடுகளை சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா, முனியாண்டி, தலைமை காவலர்கள், ஊர்
காவல்படையினர் செய்திருந்தனர்.