Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கோழிப்பண்ணைத் தொழிலை விவசாயதொழிலாக அறிவிக்க கோரி தீர்மானம்

கோழிப்பண்ணைத் தொழிலை விவசாயதொழிலாக அறிவிக்க கோரி தீர்மானம்

கோழிப்பண்ணைத் தொழிலை விவசாயதொழிலாக அறிவிக்க கோரி தீர்மானம்

கோழிப்பண்ணைத் தொழிலை விவசாயதொழிலாக அறிவிக்க கோரி தீர்மானம்

ADDED : செப் 30, 2011 01:41 AM


Google News
நாமக்கல்: 'கோழிப்பண்ணைத் தொழிலை, விவசாயத் தொழிலாக அங்கீகாரம் அளிக்க, முதல்வர் ஆவண செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கக் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நாமக்கல், கருங்கல்பாளையம் கொங்கு திருமண மண்டபத்தில், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் நல்லதம்பி தலைமை வகித்தார்.என்.இ.சி.சி., நாமக்கல் மண்டலத் தலைவர் டாக்டர் செல்வராஜ், பவுல்ட்ரி ஃபார்மர்ஸ் மார்கெட்டிங் பெடரேஷன் தலைவர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விபரம்:தமிழக முதல்வருக்கு, சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம். கோழிப் பண்ணைத் தொழில் விவசாயம் சார்ந்த தொழிலாக உள்ளது.

எனவே, இத்தொழிலை விவசாயத் தொழிலாக அங்கீகாரம் அளிக்க, முதல்வர் ஆவண செய்ய வேண்டும்.கோழிகளுக்காக, கிணற்றிலிருந்து எடுக்கும் குடிநீருக்கான மின் கட்டணத்தை தனிக் கட்டண விகிகதமாக மாறறிக் கொடுக்க வேண்டும். கட்டண விகிதம், ஆண்டுக்கு ஒருமுறை அதிகபட்சமாக, 1,000 ரூபாய் செலுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us