மீனவர் கடத்திக் கொலை இருவர் கோர்ட்டில் சரண்
மீனவர் கடத்திக் கொலை இருவர் கோர்ட்டில் சரண்
மீனவர் கடத்திக் கொலை இருவர் கோர்ட்டில் சரண்
ADDED : ஆக 26, 2011 12:31 AM
சென்னை : மீனவரை கடத்தி கொலை செய்த வழக்கில், மேலும், இரண்டு பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.
இதுவரை சரணடைந்தோரின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை, 53. கடந்த 2006ம் ஆண்டு முதல் காணவில்லை. முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் தம்பிகள், சங்கர், சொக்கலிங்கம் மற்றும் அவரது அடியாட்களால், புதுச்சேரிக்கு கடத்திச் சென்று, கொலை செய்யப்பட்டது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், அதே பகுதியைச் சேர்ந்த டைசன், சுந்தர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய கே.வி.கே.குப்பத்தைச் சேர்ந்த யோபு, 20, கெல்லீஸ் சிறார் கோர்ட்டிலும், டில்லி, 35 என்பவர், சிதம்பரம் கோர்ட்டிலும் நேற்று சரணடைந்தனர். ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர் சாமியின் தம்பிகள் சங்கர், சொக்கலிங்கம் உள்ளிட்ட நான்கு பேர் சரணடைந்துள்ளனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.