/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/புதியம்புத்தூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டிபுதியம்புத்தூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி
புதியம்புத்தூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி
புதியம்புத்தூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி
புதியம்புத்தூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி
ADDED : ஆக 24, 2011 02:45 AM
புதியம்புத்தூர் : புதியம்புத்தூரில் நடந்த கபடி போட்டியில் பாஞ்சை இந்திரா நகர் அணி முதலிடம் பெற்றது.
புதியம்புத்தூர் ஜான் தி பாஸ்டிஸ்ட் பள்ளி கிரவுண்டில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியை இந்து நாடார் உறவின்முறை தலைவர் புதுராஜா துவக்கி வைத்தார். . 20ம் தேதி இரவு 11 மணிக்கு ஆரம்பித்த இக்கபடி போட்டி 22ம் தேதி மாலை 6 மணி வரை நடந்தது. 43 அணிகள் கபடிப் போட்டியில் கலந்து கொண்டது. முதலாவது பரிசை பாஞ்சை இந்திராநகர் ராஜா அணியும், 2வது பரிசை புதியம்புத்தூர் சூப்பர் டீலக்ஸ் ஏ அணியும், 3வது பரிசை ஆர்.ஏ.சி.சாமிநத்தம் அணியும், 4வது பரிசை பண்டாரவிளை மேஜியா அணியும், 5வது பரிசை ஓசனூத்து சிவக்குமரன் அணியும், 6வது பரிசை தாழையூத்து வின் ஸ்டார் அணியும், 7வது பரிசை புதியம்புத்தூர் இங்கிலாந்து நட்புக்காக அணியும், 8வது பரிசை புதியம்புத்தூர் சூப்பர் டீலக்ஸ் பி அணியும் பெற்றது. முதல் பரிசு 5 ஆயிரத்து ஒன்றை ஜவுளி ரெடிமேட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும், 2வது பரிசு 4 ஆயிரத்து ஒன்றை இந்து நாடார் இளைஞர் குழு தலைவர் செல்வக்குமாரும், 3வது பரிசு 3 ஆயிரத்து 501ஐ தேமுதிக.,மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் முருகனும், 4வது பரிசு 3 ஆயிரத்தை வெள்ளத்துரையும், 5வது பரிசு 2 ஆயிரத்து 501ஐ பொன்ராஜூம், 6வது பரிசு 2 ஆயிரத்து ஒன்றை சமக.,நகர செயலாளர் பாப்புராஜூம், 7வது பரிசு ஆயிரத்து 501ஐ கிறிஸ்டோபரும், 8வது பரிசு ஆயிரத்து ஒன்றை ஆனந்த்தும் வழங்கினர். சிறந்த ஆட்டக்காரர்களுக்கான பரிசுகளை ஜெயக்குமார், திருமணி ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய முருகன் நன்றி கூறினார்.இக்கபடி போட்டியை புதியம்புத்தூர் சூப்பர் டீலக்ஸ் கபடிக்குழுவினர் ஆடித்திருவிழாவிற்காக ஏற்பாடு செய்திருந்தனர்