/உள்ளூர் செய்திகள்/சேலம்/சுகாதாரத்துறை மெத்தனம் மாநகராட்சியில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்சுகாதாரத்துறை மெத்தனம் மாநகராட்சியில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
சுகாதாரத்துறை மெத்தனம் மாநகராட்சியில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
சுகாதாரத்துறை மெத்தனம் மாநகராட்சியில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
சுகாதாரத்துறை மெத்தனம் மாநகராட்சியில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
ADDED : ஆக 09, 2011 01:59 AM
சேலம்:சேலம் மாநகராட்சி பகுதிகளில், வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி சுகாதாரத்துறை
அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர்.சேலம் மாநகராட்சியில்
சாக்கடை, கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி வழிகிறது. கொசு உற்பத்தி
அதிகரித்துள்ளது. பல இடங்களில் குப்பைகள் மலைப்போல தேக்கம் அடைந்து,
சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. அதேப்போல், மேல்நிலை நீர்த்தேக்கத்
தொட்டிகள் பராமரிப்பிலும் அக்கறை காட்டவில்லை.இதனால், சூரமங்கலம்,
பெரமனூர், அழகாபுரம் புதூர், கிச்சிப்பாளையம், எருமாப்பாளையம் உள்ளிட்ட
பகுதிகளில் ஏராளமானோர் வைரஸ் காய்ச்சல்
பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.மாநகராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் சீதோஷ்ண நிலை
மாற்றத்தின் போது வைரஸ் காய்ச்சல், வேகமாக பரவும். ஆனால், ஒருமுறை கூட
மாநகராட்சி அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை.
மாநகராட்சியின் அலட்சியத்தால்தான் சிக்-குன் குனியா பாதிப்பில் மாநகர
மக்கள் அவதிக்குள்ளாகினர்.கடந்த ஆண்டு வைரஸ் காய்ச்சலால் அம்மாப்பேட்டை
உள்ளிட்ட ஒரு சில இடங்களில் குழந்தைகள் உள்பட இரண்டு பேர் பலியாகினர்.
வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்து, மாநகராட்சி அதிகாரிகளை கேட்டால்,
கமிஷனர், நகர் நல அலுவலர் ஆகியோர், 'குடிநீரை காய்ச்சி குடியுங்கள்' என்று
ஒற்றை வரியில் பதிலை கூறி நழுவி விடுகின்றனர்.கடந்த மாநகராட்சி கூட்டத்தில்
ஒட்டு மொத்த கவுன்சிலர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தை
வெட்டவெளிச்சம் போட்டு காட்டினர். சுகாதாரத்துறை கண்டு கொள்ளாததால், வைரஸ்
காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால், பொதுமக்கள் பாதிக்கும் பரிதாப நிலை
ஏற்பட்டுள்ளது.


