ADDED : ஆக 08, 2011 03:04 AM
சேலம்: சேலம் பந்தய புறா வளர்ப்போர் சங்கத்தின் சார்பில், புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் சிந்தாமணியில் இருந்து சேலம் வரை உள்ள தூரத்தை கடந்து, சீனிவாசன் என்பவரது புறா ஐந்து புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது. கோபி ஞானவேல் புறா நான்கு புள்ளியுடன் இரண்டாமிடம், மூன்று புள்ளியுடன் சீனிவாசன் புறா மூன்றாமிடம் பெற்றது. ஆந்திர மாநிலம் கதிரியில் இருந்து சேலம் வரை உள்ள தூரத்தில், பிரகாஷ் என்பவரின் புறா ஆறு புள்ளியுடன் முதலிடம் பெற்றார். ஐந்து புள்ளியுடன் சீனிவாசன் புறா இரண்டாமிடம், நான்கு புள்ளியுடன் கோபி ஞானவேல் புறா மூன்றாமிடம் பெற்றது. ஆந்திர மாநிலம் தாட்பத்ரியில் இருந்து சேலம் வரை , சீனிவாசனின் புறா ஏழு புள்ளியுடன் முதலிடம் பெற்றது. ஆறு புள்ளியுடன் பிரகாஷ் புறா இரண்டாமிடம், ஐந்து புள்ளியுடன் சீனிவாசன் புறா மூன்றாமிடம் பெற்றது. ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து சேலம் வரை உள்ள தூரத்தை கடந்து, மணிகண்டன் புறா எட்டு புள்ளியுடன் முதலிடம், ஏழு புள்ளியுடன் சீரங்கப்பாளையம் கோபி புறா இரண்டாமிடம், ஆறு புள்ளியுடன் சீனிவாசன் புறா மூன்றாமிடம் பெற்றது. ஆந்திர மாநிலம் மெகபூப்நகரிலிருந்து சேலம் வரை உள்ள தூரத்தில், சீனிவாசன் என்பவர் புறா ஒன்பது புள்ளியுடன் முதலிடம், எட்டு புள்ளியுடன் இரண்டாமிடம், ஏழு புள்ளியுடன் அருள் என்பவரின் புறா மூன்றாமிடம் பெற்றது. ஆந்திர மாநிலம் பெட்ஜல் நகரில் இருந்து சேலம் வரை உள்ள தூரத்தில், அருள் என்பவரின் புறா, 10 புள்ளியுடன் முதலிடம், ஒன்பது புள்ளியுடன் சீனிவாசன் புறா இரண்டாமிடம், எட்டு புள்ளியுடன் அருள் என்பவரது புறா மூன்றாமிடம் பெற்றது. ஆந்திர மாநிலம் நிஜாபாத் நகரில் இருந்து சேலம் வரையுள்ள தூரத்தில் அருள் என்பவரின் புறா 11 புள்ளியுடன் முதலிடம் பெற்றது. 10 புள்ளியுடன் சீனிவாசன் புறா இரண்டாமிடம், ஒன்பது புள்ளியுடன் அருள் புறா மூன்றாமிடம் பெற்றது. சீனிவாசன் வளர்த்த புறா 67 புள்ளியுடன் முதலிடம், 55 புள்ளியுடன் அருள் புறா இரண்டாமிடம், 24 புள்ளியுடன் மணிகண்டன் புறா மூன்றாமிடம் பெற்றது. 2011ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை சேலம், ஜங்ஷன் சீனிவாசன் பெற்றார். லாங் டிஸ்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை மணக்காடு அருள் பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சேலம் பந்தய புறா வளர்ப்போர் சங்கத் தலைவர் ரமேஷ், செயலாளர் சங்கர், பொருளாளர் வேலமுகுந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.


