ADDED : ஆக 07, 2011 02:54 AM
மதுரை:சேடப்பட்டி அருகே சென்னம்பட்டியில் காய்கறி விதைப்பு பணி துவக்கி
வைக்கப்பட்டது.தோட்டக்கலைத் துறை சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில்,
வீட்டுத் தோட்டம் அமைப்பது, காய்கறி சாகுபடியில் அதிக மகசூல், மா, நெல்லி,
வாழை, திசுவாழை, மல்லிகை, மிள காய், மண்புழு உரம் போன்றவை குறித்து
விளக்கப்பட்டது.
விவசாயிகளின் வீடுகளில் பண்ணை மகளிர்குழுவினரால்
பயிர்க்குழிதோண்டப்பட்டு, பாகல், புடலை, வெண்டை, சுரை போன்ற காய்கறி
விதைகள் விதைக்கப்பட்டன.ஊராட்சி தலைவர் பாண்டி முன்னிலை வகித்தார். உதவி
இயக்குனர் முத்தம்மாள் துவக்கி வைத்தார். தோட்டக்கலைஅலுவலர் மு.பாண்டி
விளக்கி பேசினார்.