/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பைக் திருட்டு: விழுப்புரம் ஆசாமி கைதுபைக் திருட்டு: விழுப்புரம் ஆசாமி கைது
பைக் திருட்டு: விழுப்புரம் ஆசாமி கைது
பைக் திருட்டு: விழுப்புரம் ஆசாமி கைது
பைக் திருட்டு: விழுப்புரம் ஆசாமி கைது
ADDED : ஆக 06, 2011 02:17 AM
சிதம்பரம் : சிதம்பரத்தில் மோட்டார் பைக் திருடிய விழுப்புரம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீசார் வடக்கு வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.அதில் அவர் விழுப்புரம் ஆனங்கூரைச் சேர்ந்த அமுலதாஸ் மகன் மைக்கேல் ராஜ், 25; எனவும், மோட்டார் பைக் திருடன் என்பதும், சிதம்பரம் நேஷனல் ஸ்டோர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான பைக்கை திருடி வந்ததும் தெரியவந்தது.உடன் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து, அவரிடமிருந்து மோட்டார் பைக்கை பறிமுதல் செய்தனர்.