ADDED : ஆக 05, 2011 12:05 AM
முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் கடந்த ஆண்டு 42 இடங்களில் குப்பைத்தொட்டிகள்
வைக்கப்பட்டன.
சில வாரங்களிலேயே தொட்டிகள் சேதமடைந்தன. குப்பைகள்
தெருக்களிலும், ரோட்டோரங்களிலும் கொட்டப்படுகின்றன. துர்நாற்றத்தால்
பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கொசுக்களும் அதிகரித்து மக்களை
பாடாய்படுத்துகின்றன. தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள
குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.