Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வனவிலங்குகள் பலியாவதை தடுக்க தடுப்பு வேலி அமைக்கப்படுமா?

வனவிலங்குகள் பலியாவதை தடுக்க தடுப்பு வேலி அமைக்கப்படுமா?

வனவிலங்குகள் பலியாவதை தடுக்க தடுப்பு வேலி அமைக்கப்படுமா?

வனவிலங்குகள் பலியாவதை தடுக்க தடுப்பு வேலி அமைக்கப்படுமா?

ADDED : ஆக 03, 2011 01:51 AM


Google News
சிறுபாக்கம் : கிருஷ்ணாபுரம் வனப் பகுதியில் வனவிலங்குகள் பலியாவதை தடுக்க தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிறுபாக்கம் அருகே கிருஷ்ணாபுரம் வனப்பகுதி உள்ளது. வனப்பகுதி உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி வேப்பூர் மாநில நெடுஞ்சாலை வழியே 40 கி.மீ., தொலைவில் பரந்து விரிந்துள்ளது. வனப்பகுதியில் புள்ளி மான்கள், விளை மான்கள், அரிய வகை எறும்புதிண்ணி, தேசிய பறவை மயில் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. வனப்பகுதியில் ஆச்சான், புங்கன், நாவல் உள்ளிட்ட உயர் ரக மரங்கள் அதிகளவில் உள்ளன. வனவிலங்குகள் குடிநீருக்காக பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள நெடுஞ்சாலை வழியாக புதுச்சேரி, கோவை, சேலம், ஈரோடு செல்லும் வாகனங்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் அதிவேகமாக செல்லும் போது விலங்குகள் சிக்கிப் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. மேலும் கோடைகாலங்களில் குடிநீருக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறும் மான்கள் திறந்த வெளிக் கிணறுகளில் தவறி விழுந்து பலியாகிறது. மேலும் வனப்பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள் விவசாயப் பயிர்களை தின்று நாசம் செய்கின்றன. விவசாயப் பயிர்கள் பாதுகாப்பு வேண்டியும், வனவிலங்குகள் பாதுகாப்பு வேண்டியும் வனப்பகுதியை ஒட்டி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வனவிலங்கு ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us