பெல்லாரி சுரங்கப்பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
பெல்லாரி சுரங்கப்பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
பெல்லாரி சுரங்கப்பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
ADDED : ஜூலை 30, 2011 03:50 AM

புதுடில்லி:கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதிகளில் உள்ள இரும்புதாது சுரங்கங்களில் நடைபெற்று வரும் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில்த்தில் பெல்லாரி மாவட்டத்தில் ஏராளமான இரும்பது தாது வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. உள்நாட்டின் எஃகு உற்பத்திக்கு தேவையான இரும்பு தாதுக்கள் இப்பகுதியிலிருந்து தான் வெட்டி எடுக்கப்படுகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பெரும்பால சுரங்கங்கள், சட்டவிரோதமாகவும், உரிய அனுமிதியின்றியும் நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதி பெறாமலும் நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து மத்திய வனம் மற்றுமு் சுற்றுச்சூழ்ல்துறை ஆய்வு செய்து சுப்ரீம் கோர்டில் அறிக்கை சமர்பித்தது. இதன் மீதான விசாரணை நேற்று வந்தது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி எஸ்.எச்.கபாடியா விசாரணை நடத்தி, பெல்லாரிபகுதிகளில் உள்ள இரும்பு தாது சுரங்கங்களை உடனடியாக நிறுத்தி வைக்கும்படியும், மறு உத்தரவு வரும் வரை பணிகள் எதையும் துவக்கிடகூடாதும் எனவும் தடைவிதித்தார்.