/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வறுமை ஒழிப்பு திட்டம் கிராமங்களில் கலை நிகழ்ச்சிவறுமை ஒழிப்பு திட்டம் கிராமங்களில் கலை நிகழ்ச்சி
வறுமை ஒழிப்பு திட்டம் கிராமங்களில் கலை நிகழ்ச்சி
வறுமை ஒழிப்பு திட்டம் கிராமங்களில் கலை நிகழ்ச்சி
வறுமை ஒழிப்பு திட்டம் கிராமங்களில் கலை நிகழ்ச்சி
ADDED : ஜூலை 24, 2011 09:32 PM
விருதுநகர் : தமிழகத்தில் வறுமை ஒழிப்பு திட்டமான 'வாழ்ந்து காட்டுவோம் திட்டம்' சார்பில் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த கலை நிகழ்ச்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வறுமை ஒழிப்பு திட்டமான 'வாழ்ந்து காட்டுவோம் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், இந்தாண்டு முதல் 10 மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட ஒன்றியங்களில், வறுமை கோட்டுக்கு கீழ் மக்கள் அதிகம் உள்ள இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மகளிர் குழுக்கள், ஆண்கள் சுய உதவிக்குழுக்கள் அமைத்து, மக்களின் வாழ்வாதாரங்களை அதிகப்படுத்தி, தேவையான உதவிகளை செய்தே நோக்கம். இத்திட்டம் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
'வாழ்ந்து காட்டுவோம் திட்டம்' சார்பில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களை ஒரு குழுவில் 8 முதல் 10 நபர்கள் வரை தேர்வு செய்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலை நிகழ்ச்சி நடத்த 12 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பயிற்சி பெற்ற கலைக்குழுக்கள் 'வாழ்ந்து காட்டுவோம் திட்டம்' செயல்படுத்தப்படும் பத்து மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று தெரு நாடகம், திட்டப்பாடல்கள் பாடி, ஒன்னரை மணி நேரம் கலை நிகழ்ச்சி நடத்துகின்றனர். ஒரு குழு தினமும் அந்தந்த மாவட்டங்களுக்கு அருகில் உள்ள இரண்டு கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.